top of page
Writer's pictureArulsha

Untitled

முதன்மைக் கட்டுரை: தமிழ் ஒலிப்புமுறை

Learn Tamil introduction.gif

தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 (உயிரெழுத்துகள் – 12, மெய்யெழுத்துகள் – 18, உயிர்மெய்யெழுத்துகள் – 216, ஆய்த எழுத்து – 1) ஆகும்.

உயிர் எழுத்துகள்

உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.

குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.குறில்நெடில்முன்நடுபின்முன்நடுபின்மேல்iuiːuːஇஉஈஊஇடைeoeːoːஎஒஏஓகீழ்a(ai)aː(aw)அஐஆஒள

மெய் எழுத்துகள்

மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும்.

  1. வல்லினம் : க் ச் ட் த் ப் ற்

  2. மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்

  3. இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்

மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்

கீழேயுள்ள அட்டவணையில் தமிழ் மெய்யெழுத்துக்கள், அனைத்துலக ஒலிப்பெழுத்துக்களுடனும், ஒலிப்பு வகைகளுடனும் தரப்பட்டுள்ளன.இதழ்பல்நுனியண்ணம்வளைநாஇடையண்ணம்கடையண்ணம்வெடிப்புp (b)t̪ (d̪)ʈ (ɖ)tʃ (dʒ)k (g)பதடசகமூக்குmn̪ṉɳɲŋமநனணஞஙஉருட்டுɾ̪rரறமருங்குl̪ɭலளஉயிர்ப்போலிʋɻjவழய

சிறப்பு எழுத்து – ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து

ஃ – மூன்று புள்ளிகளாக எழுத்தப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லினஉயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படும். எடுத்துக்காட்டு,

  1. அஃது- ‘அ’ குறில் ‘து’- வல்லினஉயிர்மெய்

  2. எஃகு- ‘எ’ குறில் ‘கு’- வல்லினஉயிர்மெய்

  3. அஃது உரிமையுடையது- அடுத்த சொல்லின் முதலெழுத்து ‘உ’ உயிரெழுத்து

பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

ஒலிப்பியல்

தொடர்புடைய கட்டுரைகள்: தமிழ் வட்டார மொழி வழக்குகள்

பெரும்பாலான இந்திய மொழிகளைப்போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல.தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும்,தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, “த” எனும் மெய்யொலி சொல்லின் முதலில் வரும்பொழுது மிடற்றொலியாகவும், பிற இடங்களில் ஒற்றிரட்டித்தோ, வேறோரு வல்லெழுத்தால் தொடரப்பட்டோ, அல்லது மிடறு நீங்கியோ ஒலிக்கும்.

சொல்லின் முதலில் சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவைதவிர,சமஸ்கிருதம் மற்றும் பிறவடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்குஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும் சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச்சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிடமொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கெனத் தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கெனத் தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர்.

குறுக்கம்

குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.

  1. குற்றியலுகரம் – உயிர் உ

  2. குற்றியலிகரம் – உயிர் இ

  3. ஐகாரக் குறுக்கம் – கூட்டுயிர் (diphthong) ஐ

  4. ஔகாரக் குறுக்கம் – கூட்டுயிர் ஔ

  5. ஆய்தக் குறுக்கம் – சிறப்பெழுத்துஃ(ஆய்தம்)

  6. மகரக் குறுக்கம் – மெய் ம்முதன்மைக் கட்டுரை: தமிழ் ஒலிப்புமுறை

  6. மகரக் குறுக்கம் – மெய் ம்

0 views0 comments

Recent Posts

See All

Can We Lose Belly Fat by Walking?

Introduction Walking as a simple, accessible form of exercise. Brief overview of the importance of reducing belly fat for overall health....

Comments

bottom of page