top of page
Writer's pictureArulsha

Untitled


முதன்மைக் கட்டுரைகள்: பேச்சுத் தமிழ், உரைநடைத் தமிழ்



தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல்தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டவிவிலியத்தின் முதல் நூலாகியதொடக்க நூலின் முதல் பக்கம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968விழா மலரில்



தமிழில் பெயர்க்கப்பட்டு 1723இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டவிவிலியத்தின் முதல் நூலாகியதொடக்க நூலின் முதல் அதிகாரம்

தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும்,கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கேகொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழிலிருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.தமிழ்கொடுந்தமிழ்செந்தமிழ்தனித்தமிழ்நற்றமிழ்முத்தமிழ்துறை வாரியாகத் தமிழ்அறிவியல் தமிழ்ஆட்சித் தமிழ்இசைத்தமிழ்இயற்றமிழ்/இயல்தமிழ்சட்டத் தமிழ்செம்மொழித் தமிழ்தமிழிசைநாடகத் தமிழ்மருத்துவத் தமிழ்மீனவர் தமிழ்பிராமணத் தமிழ்வட்டார வழக்குகள்மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்அரிசனப் பேச்சுத் தமிழ்கரிசல் தமிழ்குமரி மாவட்டத் தமிழ்கொங்குத் தமிழ்செட்டிநாட்டுத் தமிழ்சென்னைத் தமிழ்தஞ்சாவூர்த் தமிழ்தமிங்கிலம்முஸ்லிம்கள் தமிழ்திருநெல்வேலித் தமிழ்நாஞ்சில் தமிழ்மணிப்பிரவாளம்மதுரைத் தமிழ்மலேசியத் தமிழ்யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்ஜுனூன் தமிழ்பெங்களூர் தமிழ்தொகு

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது.இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், ‘படித்த, பிராமணரல்லாதவர்’களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (Schiffman, 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு,தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். இருப்பினும் இலங்கையின் கிழக்குப்பகுதியில் குறிப்பாக மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலிருந்து வேறுபட்டு வடமொழிக்கலப்புக் குறைந்து, மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டு காணப்படுகிறது.[21]

வட்டார மொழி வழக்குகள்

முதன்மைக் கட்டுரை: தமிழ் வட்டார மொழி வழக்குகள்

தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, “இங்கே” என்ற சொல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக “இஞ்ச” என்றும்,தஞ்சாவூர் பகுதிகளில் “இங்க” என்றும்,யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் “இங்கை” என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் திருநெல்வேலி பகுதிகளில் “இங்கனெ” என்றும், இராமநாதபுரம்பகுதிகளில் “இங்குட்டு”/”இங்கிட்டு” என்றும் வழங்கும் சொற்கள் “இங்கே” என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது “இங்கணே” அல்லது “இங்கனே” என்பதன் மாற்றமும் “இங்குட்டு”/”இங்கிட்டு” என்பது “இங்கட்டு” என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். “கண்” என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: “Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)”. கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் “அக்கட்டாலே போய் உட்கார்” என்று சொல்வதைக் கேட்கலாம். “இங்கன்” அல்லது “ஈங்கன்” என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல்லே பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்கியதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.

பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத் தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் சில சொற்கள், தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. “பாலக்காடு ஐயர்” தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் காணப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில்வைணவ பரிபாசையின் எச்சம் காணப்படுகிறது.

தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதிஅடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கெனத் தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியைச் சில வேளைகளில் கணிக்க முடிகிறது.

எத்னொலோக் (Ethnologue) என்ற மொழிகள்பற்றிய பதிப்பு நிறுவனம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர்ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கைதமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தென்னாப்ரிக்க தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை,திருநெல்வேலிகொங்கு மற்றும் குமரிஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.

புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளைக் கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.

3 views0 comments

Recent Posts

See All

Can We Lose Belly Fat by Walking?

Introduction Walking as a simple, accessible form of exercise. Brief overview of the importance of reducing belly fat for overall health....

Comments


bottom of page