top of page

Untitled


தமிழ் பேசப்படும் இடங்கள்


இதையும் பார்க்க: புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணைதமிழியல்தமிழ்மலையாளத் தமிழியல்ஆங்கிலத் தமிழியல்சிங்களத் தமிழியல்சமசுகிருத தமிழியல்கன்னடத் தமிழியல்தெலுங்குத் தமிழியல்துளு தமிழியல்வங்காளத் தமிழியல்மராத்திய தமிழியல்இந்தித் தமிழியல்பர்மியத் தமிழியல்சீனத் தமிழியல்அரபுத் தமிழியல்மலாய் தமிழியல்தாய் தமிழியல்உருசியத் தமிழியல்சப்பானியத் தமிழியல்கொரியத் தமிழியல்செர்மானியத் தமிழியல்பிரெஞ்சுத் தமிழியல்டச்சுத் தமிழியல்போத்துக்கீசத் தமிழியல்சுவீடிசு தமிழியல்பாளித் தமிழியல்பிராகிருதத் தமிழியல்பிராமித் தமிழியல்பாரசீகத் தமிழியல்உருதுத் தமிழியல்எபிரேயத் தமிழியல்தொகு

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களானகர்நாடகம்கேரளம் மற்றும்மகாராட்டிரத்திலும், இலங்கையில்கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள்வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்றுசிங்கப்பூர்மலேசியாமொரீசியஸ்போன்ற நாடுகளில் குறிப்பிடத் தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.தென்னாப்பிரிக்காகயானாபிஜி,சுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந்நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியாகனடா,ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பியநாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்தபோதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.

ஆட்சி மொழி அங்கீகாரம்

தமிழ் இந்திய மாநிலமானதமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின்எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில்மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடுமாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர்நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது.தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.

இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து [19] இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர்அப்துல் கலாமால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.[20]

 
 
 

Comments


  • facebook

©2020 by Qselects. Proudly created with Wix.com

bottom of page