top of page

Untitled


தமிழ் என்னும் சொல்


சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம்பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன.தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவைத் தவிர இச்சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர்.தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிடஎன்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல்முதன்மையானவர். இவர் த்ரவிடஎன்பது திரமிட என்றாகி அது பின்னர்த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள,தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ்என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, “தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட – த்ரவிட ஆகியது என்பர்.

சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி “தனது மொழி” என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.[17]காமெல் சுவெலிபில் என்ற செக்குமொழியியலாளர் தம்-இழ் என்பது “தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி” என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.[18]

தமிழ் (சொல்லும், பொருளும்)

முதன்மைக் கட்டுரை: தமிழ் (சொல்)

தமிழ் என்னும் சொல் பல்வேறு பொருளை உணர்த்தும் சொல்லாக இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது.


தமிழ் பேசப்படும் இடங்கள்

 
 
 

Comments


  • facebook

©2020 by Qselects. Proudly created with Wix.com

bottom of page